news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

பலத்த பாதுகாப்பையும் மீறி புகுந்த மர்மநபர்.!

திருவண்ணாமலை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvm 002

திருவண்ணாமலையில் 80- வது சுதந்திர தின விழாவில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியருடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் விஜயின் புகைப்படத்தை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கொடியேற்று நிகழ்வில் மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றிய சிறிது நேரம் கழித்து யார் இந்த சார் யார் இந்த சார் என முனுமுனுத்ததால் சுதந்திர தின விழாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி விழா மேடைக்கு முதல்வரின் படத்துடன் மர்ம நபர் வந்ததை கவனிக்காமல் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மூவர்ண தேசியக்கொடி ஏற்றுவதற்காக விழா மேடைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்தார்.
சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆயுதப்படை மைதான வளாகத்தில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார்கள் மாவட்ட எஸ்பி உதயகுமார் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் விழா மேடைக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ் பி உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தேசிய கொடி கம்பம் அருகே வருகை தந்தனர்.

தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்ற முயன்ற போது அப்போது திடீரென விழா மேடையில் தமிழ்நாடு முதல்வர் விஜயின் புகைப்படத்தை தனது பாக்கெட்டில் அனைவருக்கும் தெரிவது போல வைத்துக் கொண்டு தேசிய கொடி முன்பாக பலத்த பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் மரியாதை செய்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடித்தவுடன் சிறிது நேரம் கழித்து யார் இந்த சார் யார் இந்த சார் என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்ததை அடுத்து காவல்துறையினர் அப்பொழுதுதான் கண்விழித்தனர். தொடர்ந்து அந்த சார் யார் என்று தெரியாமல் அங்கிருந்து காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்திய நிலையில் அவர் அந்த மைதானத்திலேயே சுற்றி வந்து மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உணவை வாங்கி உணவருதினார்.

அப்போது அந்த சாரின் பெயர் பிரகாஷ் காந்த் என்றும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் உள்ள கரைப்பூண்டி கிராமம் என்று தெரிவித்ததுடன் விஜயகாந்த் படத்தையும் விஜய் படத்தையும் மாற்றி மாற்றி காண்பித்தார். இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். 80-வது சுதந்திர தின விழா திருவண்ணாமலையில் இன்று ஆட்சியர் கொண்டாடிய நிலையில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி திடீரென முதல்வர் விஜயின் படத்தையும் விஜயகாந்த் படத்தையும் வைத்துக்கொண்டு ஆட்சியருடன் இணைந்து கொடியேற்றிய நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் பலத்த பாதுகாப்பிற்காக இருந்த சூழலில் காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி தன்னிச்சையாக வந்த நபரால் சுதந்திர தின விழா மைதானத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்பட்டது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாய் போட்டு படுத்து உறங்கிய பொதுமக்கள்.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved