news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர்

பாகிஸ்தான் அதிபர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிப் அலி சர்தாரி

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேச்சு

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் உலகின் மற்ற பகுதிகளில் இருப்பதை போலவே மிகவும் சுதந்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதாக அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் 4 சதவீதம் அளவிற்கு இந்து மக்கள் வாழ்ந்து வருவதாகவும், உலகின் மற்ற நாடுகளில் சிறுபான்மையினர் எப்படி இருக்கிறார்களோ அதேபோன்றுதான் பாகிஸ்தானின் இந்துக்கள் இருப்பதாக ஆசிப் அலி சர்தாரி கூறினார்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

ஏமன் நாட்டின் மோகா ((Mokha)) துறைமுகத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

துறைமுகத்தில் இருந்த நூற்றுக்கும்ம் மேற்பட்ட படகுகளும், சரக்கு பொருட்களும் தீயில் கருகி நாசமாகின. அதேபோன்று மரிப் மற்றும் அல் மஹா ஆகிய நகரங்களிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்

ராணுவ, அரசியல் ரீதியாக ஈரான் வெற்றி பெற்றுள்ளது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகம்மது கலிபாஃப் ((Mohammad Ghalibaf)) தெரிவித்துள்ளார்.

ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே ஹோர்மூஸ் நீரிணையை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரில் வென்றதாக ஈரான் கூறியிருப்பது மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Related Link
புளூட்டோ மேற்பரப்பில் உறைந்துள்ள திரவ நைட்ரஜன்

புளூட்டோ மேற்பரப்பில் உறைந்துள்ள திரவ நைட்ரஜன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லி போராட்டம் - ராகுல் காந்தி பாராட்டு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved