Also Watch
Read this
By: Manigandan Raja

லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேசிருக்கிறாரு
‘DC’ படத்தோட, சக நடிகர்களோட நடந்த கலந்துரையாடல்ல, தன்னை நோக்கி வர்ற ட்ரோல்ஸ் பத்தி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேசிருக்கிறாரு. அதுல "சார், இதுமாதிரியான ட்ரோல்ஸ் உங்களைப்பார்த்து வருது, அதை எப்படி ஹேண்டில் செய்றீங்கன்னு கேள்வி கேக்குறாங்க. அதுக்கு லோகேஷ் கனகராஜ், "என் அம்மாவே எனக்கு அந்த ட்ரோல்ஸை அனுப்புவாங்க.
அதுக்கெல்லாம், எதுக்கு டென்ஷன் ஆகணும்? நம்ம வேலைய நல்லா பார்த்தா நம்மள கொண்டாடுவாங்க, அதுல ஏதாச்சும் தப்பு இருந்தா ட்ரோல் பண்ணுவாங்க, என்னுடைய முந்தைய இரண்டு படங்களான ‘லியோ’ மற்றும் ‘கூலி’-யில் சில தவறுகள் இருந்துச்சு, அதனால இப்போ நிறைய ட்ரோல்ஸ் வருதுன்னு தெரிவிச்சிருக்காரு லோகேஷ் கனகராஜ்.
கூடவே நான் இப்போ அல்லு அர்ஜுனோட ‘AA23’ படத்தை சீக்கிரமா டைரக்ட் செய்யப்போறேன், அந்தப் படத்து மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, அந்தப்படம் வெளியானதும் இந்த ட்ரோல்ஸ் தானாகவே மறைஞ்சிடும்னு லோகேஷ் கனகராஜ் ஓப்பனா பேசிருக்கிறாரு.
'அரசன்' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுங்க
வெற்றிமாறன் இயக்கத்துல சிலம்பரசன் நடிச்சிட்டு வர்ற 'அரசன்' படத்தின் Rough Footage-ஐ பார்த்த நடிகர் Ken Karunas, சிலம்பரசனின் Phenomenal மற்றும் Resounding Mass Performance-ஐ வெகுவாபாராட்டியிருக்கறதா தகவல் வெளியாகிருக்கு.

அதே மாதிரி, இந்த படத்தை பொங்கல் வெளியீடா கொண்டுவாங்கன்னும் படத்திற்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிக்கான அனைத்து அம்சங்களும் இருக்கறதாவும், படக்குழுகிட்ட கென் கருணாச் சொன்னதா சொல்றாங்க. மேலும், 'அரசன்' படத்தில் தனக்கும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைக் கொடுங்கன்னு Ken Karunas தன்னோட விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்காராம்.
வசூல் வேட்டையில் 'விஸ்வநாத் & சன்ஸ்'
லக்கி பாஸ்கர் படத்தை டைரக்ட் பண்ணுன இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்துல சூர்யா நடிச்சிருக்கற விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாச்சி. காதல், காமெடி, எமோஷன், உறவுகள்னு என பல உணர்வுகள உள்ளடக்கிய இந்த படத்துல, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிச்சிருந்தாங்க.

இந்த நிலையில் இந்த படத்தின் 3 நாள் வசூல் விவரம் பத்துன தகவல் இப்போ வெளியாகிருக்கு. படம் வெளியான 3-ஏ நாட்கள்ல உலகளவுல ரூபாய் 120 கோடி வரைக்கும் கலெக்ட் செஞ்சிருக்கறதா தகவல் வெளியாகிருக்கு. அடுத்தடுத்த நாட்கள்ல வசூல் இன்னும் எகிறும்னு எதிர்பார்க்கப்படுது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved