Also Watch
Read this
By: Manigandan Raja

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வலியுறுத்தல்
ரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வருவதற்கு முன்பாக, 2 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வங்கதேச அரசால் தேடப்படும் பிற நபர்களை நாடு கடத்த வேண்டும் என்றும் அதனை மேற்கொள்ளாத பட்சத்தில், தாரிக் ரஹ்மானின் இந்தியப்பயணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் நடத்திய வான்வழித்தாக்குதல்
உக்ரைன் நடத்திய வான்வழித்தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை தள கிடங்கு பற்றி எரிந்தது.

ரஷ்ய தலைநகரை குறிவைத்து ஒரே இரவில் 822 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டது. இதில் 600க்கும் மேற்பட்ட டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை அங்கு வாழும் இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினர். விழாவிற்கென தனி மேடை அமைத்து மூவர்ண தோரணம் கட்டி மேடையில் குழந்தைகளை ஆட வைத்து சுதந்திர தின கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved