Also Watch
Read this
By: Manigandan Raja

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அறிவிப்பு
நடப்பு ஆண்டுடன் தனது கால்பந்து பயணம் முடிவுக்கு வருவதாக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அறிவித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
கால்பந்து தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், அதிலிருந்து விலகிய பிறகு ஏற்படும் வெற்றிடத்தை வேறு வழிகளில் நிரப்ப வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாத்திமா சனா தலைமையிலான அணியில், ஆயிஷா ஜபர், இமான் நசீர், ஈமான் பாத்திமா, குல் பெரோசா, முனீபா அலி, நஷ்ரா சந்து, சாய்ரா ஜபீன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved