Also Watch
Read this
By: Fyrose Banu

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் ஆட்டை தூக்கிக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அனுமந்தன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவிந்தன் பட்டி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவரது ஆட்டுக் கூட்டத்திலிருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள வெள்ளாட்டை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் வீடியோ வெளியாகி உள்ளது. உடனடியாக இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஆட்டை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாகவும் அடிக்க அடிக்கடி கோவிந்தன் பட்டி கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் வாழக்கூடிய இடத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வரக்கூடிய நபர்கள் ஆடு கோழி இரண்டு சக்கர வாகனம் என பல்வேறு திருட்டு சம்பவங்களை ஈடுபடுவதாகவும், இவர்களை உத்தமபாளையம் காவல்துறையினர் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. தற்பொழுது கோவிந்தன் பட்டி கிராமத்தில் ஆட்டினை இரண்டு சக்கர வாகனத்தில் வருவார் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved