Also Watch
Read this
By: Fyrose Banu

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் அருள்மிகு சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில். 130 அடி உயரக் கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயில், ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்டதாகும். இக்கோயிலின் புகழ்பெற்ற ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வந்தது. 
விழாவின் ஒவ்வொருநாளும் அம்பாள்பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 9ம் நாள் திருவிழா வெகுவிமர்சையாகத் தேரோட்டம் நடைபெற்றது. 13ம் நாள் திருவிழா: சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், அருள்மிகு சினேகவல்லி அம்பாள் தனியாக சேர்ந்து ஒரே பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். வழியெங்கும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இத்துடன் இந்த ஆண்டின் ஆடிப்பூரத் திருவிழா நிறைவுற்றது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved