news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

பெண்ணின் கழுத்திருந்த செயினை பறிக்க முயற்சி..!

கரூர்

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
krr

கரூர் மாவட்டம்,குளித்தலை பெரியபாலம் தனியார் பள்ளி அருகே தென்கடை குறிச்சியை சேர்ந்த ராமதுரை மனைவி அம்பிகா மற்றும் அவரது உறவினர் காமாட்சி இருவரும் இன்று காலை தனது வீட்டிலில் இருந்து குளித்தலை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர் அப்போது குளித்தலை - கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது அவர்களுக்கு பின்னால் பல்சர் பைக்கில் சென்னையைச் சேர்ந்த முகேஷ் (19), புவனேஷ் (19) ஆகியோர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது அம்பிகாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர் பறிக்க முடியாதால் அவர் பின்னால் அமர்ந்திருந்த அவரது உறவினர் காமாட்சி வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றுள்ளனர்.

அந்த கைப்பையில் 5ஆயிரம் பணம்,10 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ஏடிம் கார்ட், வீடு சாவி ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலையத்தில் ,பையில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்த போலீசார் பொய்கைபுத்தூர் இடத்தில் 2 நபர்களை வழிமறித்து பிடித்து குளித்தலை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து குளித்தலை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 நாள் வேலை கேட்டு அதிகாரி காலில் விழுந்த பெண்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved