Also Watch
Read this
By: Fyrose Banu

ஆகஸ்ட் மாதம் இறுதி நெருங்கிய போதும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக எல் நினோ தாக்கம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெயில் வீசி வருகிறது. திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 38 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது. 
இதனால் பகல் நேரங்களில் வெயிலில் செல்லும் வாகன ஓட்டிகள் , தொழிலாளர்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புலிவலம், சேந்தமங்கலம், வண்டம்பாலை, கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், கூத்தாநல்லூர், மாங்குடி, மாவூர் மற்றும் அடியக்கமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved