Also Watch
Read this
By: Manigandan Raja

அரையிறுதிக்கான வாய்ப்பையும் தக்க வைத்த இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்ததோடு, அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 2-வது போட்டியில் தோல்வியுற்றதால், 3-வது போட்டியில் கட்டாய வெற்றி அல்லது டிரா என்கிற நிலையில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இதில், இந்திய அணி 5-க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் குரூப் "டி" பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி அதிரடியாக விளையாடி வெறும் 26 நிமிஷங்களில் இலங்கை வீரரை வீழ்த்தி அசத்தியுள்ளார். இலங்கை வீரர் துமிந்து அபேவிக்ரமவுடன் மோதிய அவர், 21-க்கு 8, 21-க்கு10 என நேர்செட் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றார்.
அதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டன், ஆடம் பிரிங்கிள் ஜோடி விலகியதால், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் அசத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் வென் யு ஜாங்கை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பிவி சிந்து, 21-க்கு 16, 21-க்கு 17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-க்கு 11, 21-க்கு 11 என்ற நேர்செட் கணக்கில் மக்காவ் அணியின் லியோங் இயோக் சோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved