news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈரானுக்கு உதவும் நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

பொருளாதார தண்டனை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

மிகப்பெரிய பொருளாதார தண்டனை விதிக்கப்படும் - டிரம்ப்

ஈரானுக்கு உதவும் நாடுகளுக்கு பொருளாதார தண்டனை மிகப்பெரிய அளவில் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சுமார் ஆறு மாதங்களாக நடக்கும் போர், முடிவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாத நிலையில், போர் தொடர்பாக உள்நாட்டு அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளும் டிரம்ப், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையை விட முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போராகவும் தனிமைப்படுத்தலாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.

எந்தவொரு நாடும் தனது நிதி நிறுவனங்கள், வணிகம், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க அமைப்புகள் மூலம் ஈரானுக்கு எந்தவிதமான உயிர்நாடியையும் வழங்க அனுமதிக்கக் கூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல்

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாத இறுதியில் மீண்டும் இங்கிலாந்து திரும்புகின்றனர். அவர்கள் இங்கிலாந்திற்குத் திரும்பினாலும், பழையபடி அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளையோ, பொறுப்புகளையோ ஏற்க மாட்டார்கள் என்றும் சாதாரணக் குடிமக்களாகவே வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பழைமைவாதங்கள் நிறைந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்குள், ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு கறுப்பினப் பெண்ணான மேகன் மார்க்லை இளவரசர் ஹாரி திருமணம் செய்தது உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால் அரச குடும்பத்தின் உறுப்பினர்களுடனான உறவில் விரிசல்கள் ஏற்பட்டதன் விளைவாக கடந்ந்த 2020-ல் ஹாரி தம்பதி தங்களது அரச பதவிகளைத் துறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்வதாக அறிவித்தனர்.

தலைநகர் கிவ் மீது ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய புதிய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். ரஷ்யாவும் உக்ரைனும் அண்மைக்காலமாகத் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கிவ் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா ஒரு பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் 9 மாடிகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகத்தின் மேல் தளங்கள் இடிந்து விழுந்து தீப்பற்றியது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தலைநகரை நோக்கி ரஷ்யாவின் அதிநவீன 'கலிபர்' ((Kalibr)) ஏவுகணைகள் வருவதாக உக்ரைன் விமானப்படை மக்களை எச்சரித்துள்ளது.

Related Link
வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிபர் தேர்தல்

வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிபர் தேர்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிகமான படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved