Also Watch
Read this
By: Manigandan Raja

சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடரில் இந்தியா அசத்தல்
சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய செஸ் நட்சத்திரமான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். இந்த தொடரின் 8-வது சுற்றில் பிரான்ஸ் வீரர் மேக்ஸிம் வச்சியர் லகிராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன் மூலம் இந்திய அளவிலான தரவரிசையில் 4 இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ள அவர், உலக தரவரிசையிலும் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்த தொடரின் கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் சிங்க்பீல்டு கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லீட்ஸில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved