news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நல்ல நடிகர் என்பதை சூர்யா நிரூபித்து காட்டியுள்ளார்

வெற்றி விழா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராதிகா கருத்து

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் குறித்து ராதிகா கருத்து

சிக்கலான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து நல்ல நடிகர் என்பதை சூர்யா நிரூபித்து காட்டியுள்ளதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய ராதிகா, படத்தில் இருக்கும் சில காட்சிகளில் நடிக்க சூர்யா எப்படி ஒத்துக் கொண்டார்? என்பதே தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும், சூர்யாவின் இந்த மாறுபட்ட நடிப்பு பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார்.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள "இம்மார்டல்" திரைப்படம்

ஜி.வி.பிரகாஷின் "இம்மார்டல்" திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம், செப்டம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின் "தி ஒடிஸி" திரைப்படம்

கிறிஸ்டோபர் நோலனின் "தி ஒடிஸி" திரைப்படத்தை இயக்குநர் அட்லீ வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்த தனது எக்ஸ் பதிவில், "தி ஒடிசி" திரைப்படம் சினிமா அனுபவத்தையும் தாண்டிய ஒரு உணர்வு என தெரிவித்துள்ளார்.

படம் தன்னை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்ற அனுபவத்தை தந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சில திரைப்படங்கள் வெறும் பார்வைக்காக உருவாக்கப்படுவதாகவும், சில படங்கள்தான் வாழ்ந்து உணர்வதற்காக உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், "தி ஒடிஸி" திரைப்படம் புதிய அனுபவம் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Related Link
ஷாலினி தயாரிக்கும் ‘DareDevil’ படத்தில் மோகன்லால்?

ஷாலினி தயாரிக்கும் ‘DareDevil’ படத்தில் மோகன்லால்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிகமான படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved