Also Watch
Read this
By: Manigandan Raja

வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததால தனக்கு கமிஷன் ?
பிரபல நடிகை சன்னிலியோன் பணம் தர்றதா சொல்லி ஏமாத்திட்டதா மும்பையை சேர்ந்த ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயணன்ங்கறவர் வழக்கு தாக்கல் செஞ்சி இருந்தாரு. அதுல, தெலுங்கு படத்துல நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததால தனக்கு கமிஷன் தர்றதா சன்னி லியோன் சொன்னதாவும், ஆனா சொன்னபடி கமிஷன் தராம ஏமாத்திட்டதாகவும் சொல்லி இருக்காரு.
இந்த வழக்கை விசாரிச்ச நீதிமன்றம், சன்னி லியோன் மேல சுமத்தி இருக்குற புகார் பணத்துக்கான வணிக பிரச்சனையே தவிர, அவர் பண மோசடி செஞ்சிட்டாருன்னு எடுத்துக்க முடியாது. அதனால, சன்னி லியோனுக்கு எதிரா தாக்கல் செய்யப்பட்டிருக்கறமனுவ தள்ளுபடி செஞ்சிருக்கும் நீதிமன்றம்.
லைஃபை வேற யாருக்கும் ஷேர் பண்ண மாட்டேன்
மதராசப்பட்டினம் படத்துல நடிச்சு பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். தெறி, 2.0ன்னு ஒரு சில படங்கள்ல மட்டும் நடிச்ச எமி தமிழ் சினிமாவுல இருந்தே ஒதுங்கிட்டாங்க. இவங்க 2024ல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்-ஐ காதலிச்சு மேரேஜ் பண்ணாங்க.
இப்போ, எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கு. சோஷியல் மீடியாவுல ஆக்டிவாக இருக்குற எமி ஜாக்சன், அடிக்கடி தன் குழந்தை மற்றும் கணவரோட இருக்கும் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருவாங்க.

அந்த வகையில, தன்னோட 2வது ஆண்டு திருமண நாளை எமி ஜாக்சன் கொண்டாடி இருக்காங்க. அதுல, நெருங்கிய நண்பரை மேரேஜ் பண்றது பெஸ்ட்ன்னு இப்போதான் புரியுது. அன்பு, குழந்தை, அளவுக்கடந்த மகிழ்ச்சின்னு இந்த வாழ்க்கை போறதால, அதை வேற யாரோடவும், ஷேர் செஞ்சிக்க மாட்டேன்னு சொல்லி இருக்காங்க.
OTTக்கு வரும் மைக்கேல் ஜாக்சன் படம்
கிங் ஆஃப் பாப்-ன்னு சொன்னாலே அது மைக்கேல் ஜாக்சன் தான். அவரோட ஸ்டைலான டான்ஸ்க்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கறதால, கடந்த ஏப்ரல்ல மைக்கேல் ஜாக்சனோட பையோபிக் படம் ரிலீசாச்சு.

அதுல மைக்கேல் ஜாக்சனா, அவரோட சகோதரர் மகனான ஜாஃபர் ஜாக்சன் நடிச்சு இருந்தாரு. நடிப்பு, டான்ஸ் மூலம் துடிப்பான மைக்கேலை மறுபடியும் கண் முன் காட்டிய ஜாஃபர் ஜாக்சன் பாராட்டப்பட்டாரு. ஆகஸ்ட் 29ம் தேதி மைக்கேல் ஜாக்சனோட பிறந்த நாளைன்னைக்கு அவரோட பயோபிக் படம் ஜியோ ஹாட்ஸ்டார்ல ரிலீசாகும்ன்னு அறிவிச்சு இருக்காங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved