news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம்

ஹகோனாய்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தேவாலயத்தில் திருமணம்

வெள்ளை கவுனுடன் வெள்ள நீரில் நடந்து சென்ற மணப்பெண்

பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஹகோனாய் ((Hagonoy)) நகரில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்தில் ஒரு புதுமண தம்பதியின் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் லியான் லீசா கலங் ((Leian Lieza Galang)) வெள்ளை நிற கவுன் அணிந்து, கையில் பூங்கொத்துடன் வெள்ள நீரில் கவனமாக நடந்து சென்று, மணமகன் கில்பர்ட் சிகோவை கரம்பிடித்தார்.

திபெத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம்

திபெத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

அர்பா நகரின் ஆலிவ் தோட்டங்களை அழிக்கும் இஸ்ரேல்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் அர்பா நகரில் உள்ள ஆலிவ் தோட்டங்களை, இஸ்ரேலிய இராணுவத்தினர் புல்டோசர் மூலம் அழித்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

70 ஆண்டுகள் வரை பாடுபட்டு வளர்த்த ஆலிவ் மரங்கள், வருடாந்திர அறுவடை தொடங்கும் நேரத்தில் பிடுங்கி எறியப்படுவதால், வருமானம் தடைபட்டு, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளதாக பாலஸ்தீன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Link
பெர்லினில் உள்ள ரஷ்ய இல்லத்தை மூடிய ஜெர்மனி

பெர்லினில் உள்ள ரஷ்ய இல்லத்தை மூடிய ஜெர்மனி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் விபரீதம், மாணவர் தற்கொ* முயற்சி, அதிர்ச்சி தகவல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved