news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

எதிர்வீட்டு ஐடி இளைஞர் மீது ஈர்ப்பு, கள்ளக்காதலுக்கு தடை போட்ட கணவன்

அரிவாள்மனையால் கதையை முடித்த மனைவி

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் அருகே கள்ளக்காதலுக்கு கட்டையை போட்ட கணவனை கட்டிய மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரிவாள்மனையால் வெட்டிக் கொ* செய்த சம்பவம் அதிர வைத்துள்ளது. கல்நெஞ்சம் கொண்ட மனைவி காவல் நிலையத்திற்கு தானே போன் செய்து நாடகம் ஆடியும் எடுபடாததால், தற்போது தனது கள்ளகாதலனுடன் சேர்ந்து கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

கொள்ளை நாடகம்...
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பூபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சேலம் மாவட்டம் வேலக்கவுண்டனூர் பகுதியில் வீடு வாங்கி மனைவி சுஜிதா ஸ்ரீ, 13 வயது மகன் மற்றும் 10 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். பூபதி சிமெண்ட் செங்கல் வியாபாரம் செய்து வந்த நிலையில் விடிந்தும் விடியாமலும் அவரது மனைவி சுஜிதா, ஸ்ரீ ஓமலூர் காவல் நிலையத்திற்கு போன் செய்து, தங்கள் காரை வழிமறித்து கணவரை ஆயுதத்தால் தாக்கி கொ* செய்துவிட்டு, தனது நகையை யாரோ பறித்துச் சென்றதாக பதற்றமாக பேசி உள்ளார்.

அதிர வைக்கும் உண்மை
அடுத்து, அங்கு விரைந்து வந்த காவலர்கள் சுஜிதா ஸ்ரீயிடம் விசாரணை மேற்கொண்டதோடு, காரையும் கண்களால் ஸ்கேன் செய்தனர். அதில், வாகனத்தில் ஒரு துளி ரத்தம்கூட இல்லாமல் பூபதியின் உடல் பகுதிகளில் மட்டும் வெட்டுக்காயமும், ரத்தமும் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் சுஜிதா ஸ்ரீயின் வீட்டிற்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகுதான், அதிர வைக்கும் பல உண்மைகளே வெளிச்சத்திற்கு வந்தது.

எதிர்வீட்டு வாலிபருடன்...
தன்னைவிட 14 வயது மூத்த கணவரான பூபதியுடன் பல விஷயங்களில் முரண்பாட்டில் முட்டிக் கொண்ட சுஜிதா ஸ்ரீக்கு எதிர்வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத ஐடி ஊழியரான 33 வயது இளைஞர் சந்தோஷ்ராஜூடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேட், கால் ஹிஸ்ட்ரி, போட்டோக்கள் மூலம் இதனையறிந்த பூபதி, தனது மனைவியை கண்டித்ததோடு சந்தோஷ்ராஜூக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுஜிதா ஸ்ரீ தனது கணவரையே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி உள்ளார்.

இருவரும் சேர்ந்து...
இதன்படி, அதிகாலை 4 மணிக்கு சந்தோஷ்ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்த சுஜிதா ஸ்ரீ, கணவர் பூபதியின் முகத்தை தலையணையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொ* செய்ய முயன்றார். ஆனால், அவர் திமிறியதால் அந்த பிளானை கைவிட்ட மனைவி, அடுப்படியில் கிடந்த அரிவாள்மனையால் கணவரின் கழுத்து, நெஞ்சுப்பகுதி என உடலின் பல்வேறு பகுதிகளிலும் வெட்டி உள்ளார். சந்தோஷ்ராஜ் பூபதியின் கால்களை அழுத்தி பிடித்துக் கொண்டு கத்தியால் தாக்க, சுஜிதா ஸ்ரீயின் திட்டம் எளிதாக அரங்கேறியது.

போலீசாருக்கு போன்...
நினைத்ததுபோல கணவன் கதையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து முடித்த மனைவி, காரின் முன்பக்கத்தில் சடலத்தை வைத்துக்கொண்டு
ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்று பாலம் பகுதிக்கு சென்றார். தனது கழுத்தில் கிடந்த 10 சவரன் தாலிச்செயினை கழற்றி சந்தோஷ்ராஜிடம் கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்த சுஜிதா ஸ்ரீ, காலை 6 மணிக்குமேல் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். ஆனால், பூபதியின் உடம்பின் பல்வேறு இடங்களில் காயம் இருக்கும்போது காரில் ஒரு சொட்டு ரத்தம்கூட எப்படி தெறிக்காமல் இருக்கும் என்ற சந்தேகம் போலீசாரை துளைக்க சுஜிதா ஸ்ரீயை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

சிறைக்குள்...
அங்கு சுவர்களிலும், தரைகளிலும் ரத்தக்கறை கிடக்க சுஜிதா ஸ்ரீயிடமே கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில்தான், கண்ணை மறைத்த கள்ளக்காதல் முதல் கண்மூடித்தனமாக நடந்த கொ*வரை சென்றதை தனது வாயாலேயே ஒப்புக் கொண்டார் சுஜிதா ஸ்ரீ. அதன் பயனாக, கள்ளக்காதலனுடனேயே சேலம் மத்திய சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

Related Link
மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அத்துமீறிய போதை ஆசாமி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அத்துமீறிய போதை ஆசாமி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved