Also Watch
Read this
By: Manigandan Raja

அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்தவர் என மந்தனா சாதனை
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனைகள் படைத்தார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற வகையில் இந்தியாவின் மிதாலி ராஜையும், அனைத்து விதமான போட்டிகளிலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற வகையில் மெக் லானிங்கையும் முந்தினார்.
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய ஹாங்காங் அணி, 16.2 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துலீப் டிராபி இறுதிப்போட்டி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் துலீப் டிராபி இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம் அணிகள் மோதும் இந்த போட்டி வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved