news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. F-17 ராக்கெட்

பிரதமர் மோடி வாழ்த்து

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜி.எஸ்.எல்.வி. F-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்தனர்.

என்ன செய்யும் 'EOS-5' செயற்கைக்கோள்?
அதி நவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. வானிலை, பேரிடர் மேலாண்மை மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும் என கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு
திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். ’புவிசார் சுற்றுப்பாதையிலிருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படம் பிடிப்புச் செயற்கைக்கோளாக திகழும்,’ என நம்பிக்கை தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மைக்கு உதவும் வகையில் தரவுகள்
இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-05, GSLV-F17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் விவசாயம், வானிலை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு நிகழ்நேர புவி கண்காணிப்பு தகவல்களை வழங்க உள்ளது.

இந்த செயற்கைகோள் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு
நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோளான EOS-05ஐ ஜி.எஸ்.எல்.வி. F17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மற்றுமொரு சாதனை என்றும், நாட்டிற்கே பெருமையான தருணம் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சாதனை இந்திய விண்வெளித் துறையின் சிறப்பம்சங்கள், புத்தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிப்பதாகவும், பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related Link
’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்

’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved