news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

ஜாரெட் குஷ்னர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

தூதர்களை அனுப்பியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்

ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரை மாஸ்கோ மற்றும் கீவுக்கு அனுப்புகிறார்.

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்மொழிவுடன் இருவரும் செல்வதாக தெரிவித்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்காலிக போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர்கள் மாஸ்கோ மற்றும் கீவ் செல்ல உள்ள நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்திலாவது, ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் காயம்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மத்திய பகுதியில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு சேவை தலைமையகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், 5 பேர் காயமடைந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, நேட்டோ நாடுகளிடம் கூடுதல் வான் பாதுகாப்பு உதவியையும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் அமைக்கும் எந்த ஒரு ஆயுத உற்பத்தி ஆலையையும் தாக்கி அழிப்போம் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனில் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்புகளை பிரிட்டன் உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Link
குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு

குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்தியா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved