news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு
tv

Also Watch

குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு

தூதரகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ பதிவு

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

குவைத்தில் அடைத்து வைக்​கப்​பட்டு சித்​ர​வதைக்கு ஆளான தமிழக பெண் மீட்​கப்​பட்​டார்.

பணிப்பெண் வேலைக்காக...
கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் 35 வயதான வனிதா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்​ளனர். குடும்ப வறுமை காரணமாக, வீட்டு பணிப்​பெண் வேலைக்காக ஏஜென்ட் மூலம் குவைத் நாட்​டுக்கு, கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு, வனிதா சென்​றார். இந்​நிலை​யில், தான் வேலை பார்க்​கும் வீட்​டில் சிறிய அறை​யில் அடைத்து வைத்து சித்​ர​வதை செய்​வ​தாக​வும், 2 மாதங்​களாக சம்பளம் வழங்​க​வில்லை எனவும் கூறி வனிதா உருக்​க​மான வீடியோ ஒன்றை வெளி​யிட்​டார்.

கண்ணீருடன் வீடியோ வெளியீடு
வீடியோ​வில் இரு கைகளை கூப்பியபடி கண்​ணீருடன் வனி​தா பேசியதாவது;
நான் கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவள். இங்கு வந்து மூன்று மாதங்​கள் ஆகின்​றன. என்​னைச் சித்​ர​வதை செய்கிறார்கள். இரண்டு மாத​மாகச் சம்பளமும் தரவில்​லை. கள்​ளக்​குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்​காணிப்​பாளர் தான் என்னை மீட்​டு, என் தாய்​நா​டான இந்​தி​யா​விற்​குத் திரும்ப அழைத்​துச் செல்ல வேண்​டும்.
இவ்வாறு வனிதா கூறி இருந்தார்.

வைரலான வனிதா வீடியோ
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்​து, வனி​தா​வின் தாய் வெண்​ணிலா கள்​ளக்​குறிச்சி மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளரிடம் புகார் மனு அளித்​தார். தனது மகளை ஏஜென்ட் ஏமாற்​றி ​விட்​ட​தாக​வும், அவரை உயிருடன் மீட்​டுத் தரும்​படி​யும் வெண்​ணிலா கோரிக்கை விடுத்​தார். இதையடுத்​து, கள்​ளக்​குறிச்சி மாவட்​டக் காவல் துறை இது குறித்து, மத்​திய வெளி​யுறவுத்​துறை மற்​றும் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரி​வித்​து, வனி​தாவை மீட்ப​தற்​கான முயற்சிகளை தீவிரப்​படுத்​தி​யது.

நன்றி தெரிவித்து வீடியோ
இதற்​கிடை​யில், வனி​தா​வின் வீடியோ குவைத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தின் கவனத்​துக்கு சென்​றது. இதனை தொடர்ந்து தூதரக அதி​காரி​கள் வனி​தா​வின் இருப்​பிடத்தை கண்​டறிந்து அவரை மீட்​டனர். தற்​போது அவர் இந்​திய தூதரகத்​தில் பாது​காப்​பாக உள்​ளார். இது தொடர்​பாக இந்​திய தூதரகத்​துக்கு நன்றி தெரி​வித்து வனிதா புதிய வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

இந்திய தூதரகத்தில்...
பச்சை நிற குர்தா அணிந்​து, கைகளை கூப்பி மகிழ்ச்​சி​யுடன் வனிதா பேசியதாவது;
என்னை மீட்க இந்​தி​ய தூதரகத்தின் உதவியை நாடினேன். இப்​போது நான் இந்​தி​யத் தூதரகத்​தில் பாது​காப்​​பாக இருக்​கிறேன்​. இந்​தி​யத்​ தூதரகத்​திற்​கு நன்​றி. இப்​போது எனக்​கு நல்​ல உடை​யும்​ நல்​ல உணவும்​ கிடைக்கிறது.
இவ்வாறு வனிதா கூறி உள்ளார்.

Related Link
நேபாளத்தில் மரணத்தை வென்ற தொழிலாளர்கள்

நேபாளத்தில் மரணத்தை வென்ற தொழிலாளர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியல் காரணங்களுக்காக ரெய்டு என மு.க.ஸ்டாலின் சாடல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved