Also Watch
Read this
By: Manigandan Raja

அனுமதியின்றி பணியிடத்தை விட்டு சென்றால் நடவடிக்கை
பஞ்சாபில் பணிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பணி நேரத்தில் அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியேறினால், அந்த காலத்திற்கு சம்பளம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பள பிடித்தத்துடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 5 லட்சம் சிம் கார்டுகளை வாங்க அரியானா அரசு ஒப்புதல்
10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5 லட்சம் டேட்டா சிம் கார்டுகளை வாங்க அரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கொள்முதல் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் இந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
சாலையில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட நபர் கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட நபர், இளைஞர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். ககதேவ் பகுதியில் நடந்த சம்பவத்தில், மது போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞர்கள், அமித்குமாரை சுற்றிவளைத்து செங்கல்லால் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved