Also Watch
Read this
By: Manigandan Raja

டெஸ்ட் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்து சாதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்ததன் மூலம் ஜாம்பவான் சச்சினின் நீண்ட கால சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 68 அரைசதம் அடித்த சச்சினை பின்னுக்கு தள்ளி 69 அரை சதத்துடன் ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.
66 அரை சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இங்கிலந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் பாகிஸ்தானை வொயிட் வாஷ் செய்த இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அந்த அணியை 3 க்கு 0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 133 ரன்களும், இங்கிலாந்து அணி 453 ரன்களை எடுத்தன.

320 ரன்கள் பின் தங்கிய பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸில் 449 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் 130 ரன்கள் எளிய இலக்குடன் 2வது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி, 24.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து இலக்கை அடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved