Also Watch
Read this
முதலமைச்சர் விஜய், லண்டன் கார் பந்தய பயணம் குறித்து, Ajith Kumar Racing உடன் Collab செய்து வெளியான வீடியோ 2 மில்லியன் லைக்குகளை கடந்து வைரல் ஆகி உள்ளது.

2.53 நிமிட வீடியோவை வெளியிட்ட முதல்வர் விஜய்
லண்டனில், நடிகரும் ரேசருமான அஜித்குமார் பங்கேற்ற சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தின் முக்கிய காட்சிகளை 2.53 நிமிட வீடியோவாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டு உள்ளார்.

அஜித் கொடுத்த வரவேற்பு, பந்தயத்தை முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைத்தது, பந்தயத்தை பார்த்து ரசித்த உள்ளிட்ட காட்சிகளும் வெளியாகி உள்ளன.

அஜித் கார் ஓட்ட அருகில் அமர்ந்து விஜய் உற்சாகம்
லண்டனில் நடிகரும் ரேஸருமான அஜித் பங்கேற்ற சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தின்போது, அஜித்துடன் முதலமைச்சர் விஜய் ரேஸ் காரில் சென்ற வீடியோ வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது.

அஜித் காரை ஓட்ட முதல்வர் விஜய் ரேஸ் உடையுடன் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு உற்சாகப்படுத்திய காட்சிகளை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

2 மில்லியன் லைக்குகளை கடந்து...
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், லண்டன் கார் பந்தய பயணம் குறித்து, Ajith Kumar Racing உடன் Collab செய்து வெளியான வீடியோ 2 மில்லியன் லைக்குகளை கடந்து வைரல் ஆகி உள்ளது.


© Copyright Newstamil 24x7 2026. All rights reserved