news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

வீரமணி விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு சண்முகம் பதில்

வேறு ஒரு கட்சியை காண்பிக்க முடியுமா?

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போக்சோ வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிகம் தலையிட்ட வேறு ஒரு கட்சியை காண்பிக்க முடியுமா? என சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். ஜெம் வீரமணி வழக்கில் கம்யூனிஸ்டுகளின் கருத்து என்ன? என அமைச்சர் ராஜ்மோகன் கேட்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

யார் மூலம் அழுத்தம் வந்தது
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது;
எல்லா ஆட்சிக் காலத்திலும் புகார் அளிக்கப்பட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயங்கள் தற்போது வெளிவருகின்றன. தமிழக அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள், கடந்த ஆட்சிக் காலத்தில் புகார் அளிக்கப்பட்டு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அல்லது புகாரைப் பெற்ற சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அன்றைக்கு இருந்த ஆளுங்கட்சி தரப்பில் இருந்து யார் மூலம் அழுத்தம் வந்தது?

விரிவான விசாரணை
இவ்வளவு குழந்தைகளைப் பல்வேறு காலகட்டங்களில் அழைத்து, இதுபோன்ற பாலியல் குற்றங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார் என்றால், இது மிகப்பெரிய அளவில் பாலியல் மோசடி நடந்திருப்பதற்கான எடுத்துக்காட்டு. இதில் வீரமணி மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு வாய்ப்பில்லை. இதில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், அன்று அழுத்தம் கொடுத்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் யார், இதையெல்லாம் மூடி மறைப்பதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

அமைச்சர் கேட்பது ஆச்சரியம்
இந்த வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விடக் கூடுதலாகத் தலையிட்ட வேறு ஒரு கட்சியைத் தமிழ்நாட்டில் சொல்லுங்கள்? எங்கே குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் களத்தில் இல்லாத ஒரு வழக்கைக் கூட நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது. அந்த அளவிற்கு உறுதியாகப் போராடி வந்திருப்பவர்கள் நாங்கள். ஆகவே, இதன் மீது எங்களது கருத்து என்னவென்று அமைச்சர் கேட்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

உரிய நடவடிக்கை
இந்த மாதிரியான விஷயங்கள் மட்டுமல்ல; பெண்கள் மீதான வன்கொடுமைகள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எதுவாக இருந்தாலும் சமரசமில்லாமல் நாங்கள் போராடி வந்திருக்கிறோம். இந்தப் பிரச்சினையிலும் வெறும் வீரமணி என்கின்ற ஒரு நபரோடு இந்த வழக்கைச் சுருக்கிவிடக் கூடாது. இந்த விவகாரம் எந்தெந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறதோ, எல்லா காலத்திலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், இவரோடு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் விரிவான முறையில் இந்த விசாரணையும் வழக்கும் நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சண்முகம் கூறி உள்ளார்.


Related Link

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்பளிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved