Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் மற்றும் உக்ரைன் போர் காரணமாக விலை அதிகரிப்பு
ஈரான் மற்றும் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதால், ஐரோப்பிய நாடுகள் பல்வேறு எரிபொருள் நிவாரணத் திட்டங்களை வழங்கி வருகின்றன.
ஜெர்மனி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான எரிசக்தி வரியை லிட்டருக்கு சுமார் 15 ரூபாய்க்கும் மேல் குறைத்துள்ளது. பிரான்ஸ் எரிபொருள் நிவாரண நிதியை உயர்த்தியுள்ளது. ஸ்பெயின், எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல்
எல்லையில் நடைபெற்ற மோதலில் ஆப்கானிஸ்தான் படையினரை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அத்துமீறி தாக்கிய பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஆப்கானிஸ்தான் படையினர் உயிரிழந்த தாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
உலக அமைப்பை சொந்த நலனுக்குப் பயன்படுத்துகிறார்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஐ.நா. அமைப்பில் தங்களுக்கு இருக்கும் தற்போதைய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நினைப்பவர்கள்.

அதனை சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துகிறார்களே தவிர, அதன் எதிர்காலம் அல்லது உலக அமைதி பற்றி உண்மையாகக் கவலைப்படுவதில்லை என்று அவர் சாடியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved