news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அதிமுக, திமுக காணாமல் போகும் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

அதிமுகவிற்கு ஏற்பட்ட நிலை திமுகவிற்கு ஏற்படும்

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவிற்கு ஏற்படும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார். அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுமே காணாமல் போகும் என கடுமையாக விமர்சித்தார்.

மதுரையில் நிர்மல்குமார்...
மதுரையில் வரும் 28ஆம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் நிர்மல் குமார் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியம் திறப்பு விழா, தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா வரும் 28ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க முதல்வர் விஜய் வருகிறார். தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை மதுரையிலிருந்து தொடங்கி வைப்பது அனைவருக்கும் ஒரு பெருமையான விஷயம்.

ஜெம் வீரமணி வழக்கு
திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு போன்று பல வழக்குகள் மூடி மறைக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக வீரமணியை மிரட்டி, பலரும் பணம் வாங்கியதாக செய்திகள் வருகின்றன. இது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் போக்சோ வழக்கை கிடப்பில் போடுவதற்கான காரணம் என்ன? போதுமான ஆதாரம் இல்லை என்று கிடப்பில் போட்டீர்களா? இல்லை பேரம் முடிந்து போனதால் கிடப்பில் போட்டீர்களா? என்பதுதான் எங்கள் கேள்வி.

அரசியல் எதிர்காலம்
அரசியலில் பெரிய எதிர்காலம் வேண்டும் என நினைக்கிறவர்கள் யாரும் ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமியை நம்பிப் பயணிக்க மாட்டார்கள். சும்மா பொழுதுபோக்குக்கு லெட்டர் பேடு வைத்துக்கொண்டு ஊர் சுற்றிவர வேண்டும் என நினைப்பவர்கள் தான் அவர்களுடன் இனி பயணிப்பார்கள்.

இடைத்தேர்தலில் பார்ப்போம்
நாங்கள் எங்கள் கொள்கை எதிரியாக பாஜகவை நினைக்கிறோம் என்பதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக, அதிமுக கட்சிகள் பெற்ற வாக்குகள், அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளுடைய வாக்குகள். இந்த தேர்தலில் அவர்கள் எவ்வளவு வாக்குகள் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Related Link

"திமுகவின் கிளை கழகம் அதிமுக" என முதல்வர் விஜய் கடும் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

1,000 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved