news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அமெரிக்க தாக்குதலில் இருந்து 2 முறை உயிர்தப்பிய மொஜ்தபா

மொஹ்சென் ஹிடாரி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மொஜ்தபா

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா குறித்து மதகுரு வெளியிட்ட தகவல்

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, தெஹ்ரான் மீது அமெரிக்கா நடத்திய 2 தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்ததாக அந்நாட்டு நிபுணர்கள் சபை உறுப்பினர் மொஹ்சென் ஹிடாரி ((Mohsen Heydari)) தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 28ஆம் தேதி தந்தை அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட தாக்குதலின் போதே மொஜ்தபாவும் காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை மீதும் குண்டுவீசப்பட்ட நிலையில், இடுபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது வருத்தம் தெரிவித்துள்ள தென்கொரியா

வடகொரிய போர் கைதிகள் இருவரை தென்கொரியாவுக்கு அனுப்பியதாக பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், உக்ரைன் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

ஒப்பந்தத்தை மீறியதுடன், அத்தகைய ஒப்பந்தமே இல்லை என்று பொய்யான அறிவிப்பை உக்ரைன் வெளியிட்டதால், இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளதாக தென்கொரியாவின் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பேரழிவுப் போருக்கும் தங்கள் நாடு தயார் - ஈரான்

பேரழிவுப் போருக்கும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அப்போர் பேரழிவுக்கு வழிவகுத்தாலும் கூட ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியாக நிற்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பேச்சுவார்த்தைக்கும் தயாராகவிருப்பதாகவும், ஆனால் அம்முடிவு அமெரிக்க அதிபர் டிரம்பின் கையில் உள்ளதாகவும் கூறினார்.

Related Link
உக்ரைனின் கீவ், கார்கிவ்வில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்

உக்ரைனின் கீவ், கார்கிவ்வில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved