news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

2027ல் பாஜகவின் இன்னொரு முகம், சாதி அரசியலா? UCCயா?

உ.பி.யில் வெல்லப்போவது யார்?

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் களம் இப்பொழுதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜக Vs எதிர்க்கட்சிகள்
ஒருபுறம் எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மையினருக்கான PDA ஃபார்முலாவை கையில் எடுத்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது மிகப்பெரிய கருத்தியல் ஆயுதமான பொது சிவில் சட்டத்தை தேர்தல் களத்தில் இறக்க ஆயத்தமாகி வருகிறது.

2029க்குள் என்.டி.ஏ. ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலக்கு நிர்ணயித்து உள்ளார். ஆனால், நாட்டிலேயே மிகப்பெரிய அரசியல்களமான உத்தரப் பிரதேசத்தில் இது சாத்தியமா? இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பது பா.ஜ.க.விற்கு வெற்றியைத் தருமா?

பொது சிவில் சட்டம்...
உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுகளை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளனர்.

உத்தரப் பிரதேச சட்ட ஆணையத்திற்கு இதுகுறித்து அதிகாரப்பூர்வ கோரிக்கைகள் எதுவும் இன்னும் அனுப்பப்படவில்லை என்றாலும், இந்த விவகாரத்தைப் பற்றிய விவாதங்களே வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். எதிர்க்கட்சிகள் சாதி அரசியலை முன்வைக்கும்போது, அதை எதிர்கொள்ளவும், தனது வாக்குகளை ஒருங்கிணைக்கவும் பா.ஜ.க.விற்கு பொது சிவில் சட்டம் அரசியல் ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

பலதார மணம், தடை
இதுவரை உத்தரகாண்ட், குஜராத், அஸ்ஸாம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. ஆனாலும், உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே கடந்த 2025 ஜனவரி முதல் இச்சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை ஆகியவற்றில் பொதுவான விதிகளை அமல்படுத்தியதுடன், பலதார மணத்தை உத்தரகாண்ட் அரசு தடை செய்துள்ளது. குறிப்பாக, லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கிய உத்தரகாண்ட் மாதிரி தான், மற்ற பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.யில் சாத்தியமா?
ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்துடன் ஒப்பிடும்போது உத்திரப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிகப்பெரிய பரப்பளவும், பல்வேறு சமூகங்கள், மதங்கள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட மாநிலம் உத்திரப் பிரதேசம்.

அதேவேளையில், பா.ஜ.க. தனது கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் , அப்னா தளம் மற்றும் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி போன்ற கட்சிகளையும் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. இந்த கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட சாதி அல்லது சமூக வாக்குகளை நம்பி இருப்பதால், பொது சிவில் சட்டத்தின் வரைவு வெளியாகும் வரை அமைதி காக்கவே விரும்புகின்றன.


அகிலேஷ் குற்றச்சாட்டு
மற்றொரு புறம், வரைவு அறிக்கை வருவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிராக கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், UCC என்பதை 'ரகசிய மதவாதச் சதி' அதாவது Underground Communal Conspiracy என்று விமர்சித்துள்ளார். வேலைவாய்ப்பு போன்ற பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பா.ஜ.க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சோதனைக்களம்
ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் சட்டப்பிரிவு 370 ரத்து ஆகிய இரண்டு முக்கிய சித்தாந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்ட பா.ஜ.க.விற்கு, பொது சிவில் சட்டம் என்பது அதன் மூன்றாவது முக்கிய டார்கெட். 2029க்குள் இதை செய்து முடிக்க, மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரப் பிரதேசம், பா.ஜ.க.வின் இந்த கருத்தியல் அரசியலுக்கு ஒரு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Link
அதிக அந்நிய முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்

அதிக அந்நிய முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved