Also Watch
Read this
By: Manigandan Raja

விமானம் கட்டுப்பாட்டை இழந்து சரிந்ததால் கடத்தல் என பீதி
துபாயில் இருந்து டெல் அவிவ் ((Tel Aviv )) சென்ற "ஃப்ளை துபாய்" விமானம் நடுவானில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் சவுதி அரேபியாவுக்குத் திருப்பி விடப்பட்டது. விமானிகளுக்குள் ஏற்பட்ட சண்டையால், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்ததால் கடத்தல் பீதி ஏற்பட்டது.
உடனடியாகப் பணியாளர்களும் பயணிகளும் விமானியைக் கட்டுப்படுத்திய நிலையில், விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதனிடையே விமான பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஃப்ளைதுபாய் விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி
நடுவானில் விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட மோதலின்போது, துணை விமானியின் நாசவேலை முயற்சியை முறியடித்த ஃப்ளைதுபாய் விமானத்தின் நாயகன் ஒரு இந்திய விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விமானத்தின் அமைப்புகளை நாசப்படுத்த முயன்றதை கேப்டன் ஸ்மித் மச்சார் எதிர்த்து போராடியுள்ளார்.

அப்போது, ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி அவரை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த நிலையிலும், துபாய் டெல் அவிவ் விமானத்தில் இருந்த சுமார் 174 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். அவரை பயணிகள் ஒரு நாயகனாக புகழ்ந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாத்திய வீரத்திற்கு எனது சல்யூட்
நாசவேலை முயற்சியில் இருந்து ஃப்ளைதுபாய் விமானத்தை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வானளாவ புகழ்ந்துள்ளார். இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாத்திய வீரத்திற்கு தனது சல்யூட் எனவும், கத்திகுத்துக்கு ஆளாகி பலத்த காயமடைந்த நிலையிலும், எதிர்த்து போராடி நடுவானில் நிகழவிருந்த ஒரு பெரும் பேரழிவை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலியர்கள் உட்பட 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ எனவும், அவர் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved