Also Watch
Read this
By: Manigandan Raja

சுமித்தை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் பெருமை கொள்கிறது
flydubai விமானத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றிய சுமித் மச்சாரை பாராட்டிய பிரதமர் மோடி, அவர் இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்தார். அதோடு, சுமித்தின் தந்தை மற்றும் தாயுடன் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், இந்த ஒட்டுமொத்த உலகமும் அவரை பார்த்து பெருமை கொள்வதாகவும் கூறினார்.
ஃபிளைதுபாய் விமான சம்பவம் குறித்த வீடியோ வெளியீடு
ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய விமானி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்கு பிந்தைய விடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில், விமானி ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் போராடுவதும், விமானத்துக்குள் சிகிச்சை பெற்று வருவதும் பதிவாகியுள்ளது.

ஃபிளைதுபாய் விமானி ஸ்மித் மச்சார் ஒரு ரியல் ஹீரோதான்
படுகாயமடைந்த நிலையிலும் ஒரு விமானியாக தனது கடமையில் இருந்து சற்றும் பின்வாங்காமல் செயல்பட்ட ஸ்மித் மச்சார் ஒரு ரியல் ஹீரோதான் என சக பயிற்சி விமானி தவால் படேல் பாராட்டி உள்ளார்.

விமான பயிற்சியின்போதே ஸ்மித் மச்சார் எப்போதும் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள பிளான் பி மற்றும் பிளான் சி என மாற்றுத் திட்டங்களை முன்கூட்டியே தெளிவாக தயார் செய்து வைத்திருப்பார் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved