இந்திய மகளிரணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 10 ஆண்டுகளாக அவரது தலைமை பண்பில் இணைந்து விளையாடியது அற்புதமானது எனவும், நாம் இணைந்து இன்னும் பல பதக்கங்களை நமது நாட்டிற்கு கொண்டு வருவோம் எனவும் கூறியுள்ளார்.
ஹர்மன்பிரீத் கௌர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 தொடர்களிலும் வீராங்கனையாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஓய்வு குறித்து அவர் எதுவும் சொல்லாதது குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அபாரம்
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். பின்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கனடாவின் வென் யு ஜாங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து 21-க்கு 8, 21-க்கு 11 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த போட்டி 28 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 2வது சுற்றில் பி.வி.சிந்து ஜப்பானின் ரிகோ உடன் மோத உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது யூத் டெஸ்ட் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது யூத் டெஸ்ட் போட்டியில் இளம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் பலோடா 14 விக்கெட்கள் சாய்த்து புதிய சாதனை படைத்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 174 ரன்களும், இந்தியா 315 ரன்களும் எடுத்தன.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-க்கு 0 என தொடரை கைப்பற்றியது.