news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, ஆபத்பாந்தவனாக நின்ற இஸ்லாமிய குடும்பம்

காமுகனை நையப்புடைத்தெடுத்த பொதுமக்கள்

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை திருவொற்றியூர் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த 6 வயதுப் பிஞ்சுச் சிறுமி, மிருகக்குணம் படைத்த காமுகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மொழி தெரியாமல் தவித்த சிறுமியின் பெற்றோருக்கு, ஆபத்பாந்தவனாக வந்து உதவிய இஸ்லாமியக் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு குற்றவாளிகளை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வடமாநில குடும்பம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏழைத் தம்பதியினர், திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருகின்றனர். பானிபூரி விற்று வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளும் இவர்கள், மாலையில் வியாபாரத்திற்குச் சென்றுவிடுவது வழக்கம். சம்பவத்தன்று இவர்களது 6 வயது மகள் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் துடி துடிக்க அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியைத் தேரடி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில் அதிர்ச்சி
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், பிஞ்சுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து பெற்றோரிடம் கூறி உள்ளார். ஆனால், தமிழ் தெரியாததால் மருத்துவர் என்ன சொல்கிறார்? என்று புரியாமல் இருவரும் கண்ணீரோடு செய்வதறியாது திகைத்து நின்றனர்.

உதவிக்கு வந்த குடும்பம்
அப்போது, எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியிலிருந்து தனது உறவினரின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்த தாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், மருத்துவர் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் இந்தியில் மொழிபெயர்த்து நிலைமையை விளக்கியதோடு, சிறுமியிடம் பேச்சு கொடுத்தபடி அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர்.

பீகாரைச் சேர்ந்த...
அப்போது, வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த ராகுல், சித்தரஞ்சன் மற்றும் மனோஜ் ஆகிய மூவரை சிறுமி அடையாளம் காட்டியுள்ளார். பெற்றோர் வியாபாரத்திற்குச் சென்ற சமயம் பார்த்து, சிறுமியை மேல் தளத்திற்கு தூக்கிச் சென்று இக்கொடூரத்தைச் செய்தது தெரியவந்தது.

காவல்துறையிடம் ஒப்படைப்பு
சிறுமி கூறியதை கேட்டு கொதித்துப்போன தாஜ் குடும்பனத்தினர், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மூவரையும் பிடிக்க முயன்றனர். அதில் முக்கிய குற்றவாளியான ராகுல் தப்பியோட முயன்றபோது கோபத்தின் உச்சியிலிருந்த பொதுமக்கள் அவனை விடாமல் துரத்தி பிடித்து ரத்தம் வரும் அளவிற்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சித்தரஞ்சன் என்பவனும் தப்பியோட முயன்றபோது அவனையும் மடக்கி பிடித்தனர். இதில் மனோஜ் என்பவன் தப்பியோடிய நிலையில், போலீசார் அவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமி 3 பேரை அடையாளம் காட்டியதால் இக்கொடூரத்தை 3 பேரும் அரங்கேற்றியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தொடரும் விசாரணை
இதற்கிடையே காவல்துறை விசாரணையில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகின. வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் மொத்தம் 10 பேர் தங்கியுள்ளதும் அவர்கள் எந்தவொரு அடையாள ஆவணங்களும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளரும் எவ்வித ஆவணங்களையும் வாங்காமல் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதும் தெரிந்தது. நெஞ்சை உலுக்கும் இந்த பாதக செயலில் வீட்டில் தங்கியிருந்த மற்றவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது, மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது

TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved