news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

’இந்த பார் இனி எங்களுக்குத்தான், குடும்பத்தையே தீர்த்துக் கட்டுவோம்’

ரவுடிகளுடன் காவலர் மிரட்டல்

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடியில் மதுபான கூடத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, கொ* மிரட்டல் விடுத்ததாக காவலர் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாவலராக இருக்கும் காவலர் ஒருவர் இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டது ஏன்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

ரவுடிகளுடன் சேர்ந்து...
’இனி இந்த பார் எங்களுக்குத்தான் சாவியை கொடுக்கவில்லை என்றால் உன்னையும், உனது குடும்பத்தையும் தீர்த்து விடுவேன்,’ என ரவுடிகளுடன் இனைந்து காவலரும் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது தூத்துக்குடியை பதறவைத்துள்ளது.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணனுக்கு சொந்தமான சிவந்தாகுளம் பகுதியில் உள்ள இடத்தில் அரசு மதுபான கடையுடன் இணைந்த மதுபான கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை கண்ணனின் மகன் வெங்டேசன் நிர்வகித்து வருகிறார்.

மதுபான பாரை கேட்டு...
கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த காவலர் பென்சிங் என்பவர் தனது நண்பரான முத்தையாபுரத்தில் மதுபான கூடம் நடத்தி வரும் மதன், ரவுடிகளான ஜோசுவா, ரமேஷ் ஆகியோருடன் இணைந்து இந்த பாரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தனது போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி வெங்கடேஷை மிரட்டி வந்துள்ளார்.

மிரட்டும் ரவுடிகள்
பென்சிங் உடன் இருக்கும் தைரியத்தில், அடிக்கடி இரவு நேரங்களில் இந்த கடைக்கு செல்லும் ரவுடிகள் கல்லாப்பெட்டியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், மதுபான பாரை தங்களிடம் கொடுத்துவிடு, அப்படி இல்லையென்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி, மதுபான கூடத்தை மூடி சாவியையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. காவலர் பென்சிங் அடிக்கடி வெங்கடேஷ்க்கு வாட்ஸ் அப்பில் ஃபோன் செய்து மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

காவல்துறையில் புகார்
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்த வெங்கடேஷ், அக்கும்பல் மீது சிசிடிவி ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் மதன், ஜோசுவா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுமட்டும் இல்லாமல் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக எஸ்பி அலுவலகத்திலும் வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார்.

காவலரே மிரட்டல்
தனது வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து மிரட்டுவதாகவும், புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிட்டு, சொத்து அனைத்தையும் பறித்துவிடுவேன் என வாட்ஸ்அப்பில் காவலர் பென்சிங் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Link
வனத்தை விழுங்கும் கல் குவாரிகள், மிரட்டலில் நடுங்கும் கிராமம்

வனத்தை விழுங்கும் கல் குவாரிகள், மிரட்டலில் நடுங்கும் கிராமம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved