INFOSYS, TCS, WIPRO, HCL, COGNIZANT நிறுவனங்களுக்கு தடை
இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை சஸ்பெண்ட் செய்து அமெரிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு தகுதியான அமெரிக்க ஊழியர்கள் கிடைக்கவில்லை எனக் கூறி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களையும், 3 ஆயிரத்து 632 Perm விண்ணப்பங்களை மைக்ரோசாப்ட் பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இடைக்கால தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் இல்லை
அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் இல்லை என அதிபர்டிரம்ப் அறிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனை நடத்தியதாகவும், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியில் ஈரானின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் கூறினார்.
ஆகவே, அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
பேருந்து மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி
உக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். உக்ரைனின் கிழக்கே கிரமடோர்ஸ்க் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதில் 30 பேர் கொல்லப்பட்ட நிலையில், 18 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின்போது அந்த பகுதியில் 2 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கூறப்படுகிறது.