news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

2,800 ஆண்டுகளுக்கு முன்பே வானளாவிய கட்டிடங்களா?

ஆப்பிரிக்கர்களின் கட்டுமான ரகசியம்

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நவீன தொழில்நுட்பமும், கான்கிரீட் மற்றும் எஃகு கம்பிகளும் இல்லாத ஒரு காலத்தில், 20 அடுக்கு கொண்ட பிரம்மாண்ட வானளாவிய கட்டிடங்களைக் கட்ட முடிந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கவனம் ஈர்த்த ஆய்வு
ஆம், சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கர்கள் இத்தகைய நுட்பமான கட்டிடக்கலை நிபுணத்துவத்தைப் பெற்றிருந்தனர் என்ற வியக்கவைக்கும் தகவல் தற்போது புதிய ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது. ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த புதிய ஆய்வு, உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரம்மாண்டமான கட்டிடம்
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் எத்தியோப்பியாவில் உள்ள டிக்ரே பகுதியில், கிமு 800ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கிராத் பெஅல் கிப்ரி என்ற பழமையான அரண்மனையின் அமைப்பை வல்லுநர்கள் தீவிரமாக மறுஆய்வு செய்தனர். யேஹா நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த இந்த அரண்மனை, சுமார் 196க்கு 196 அடி பரப்பளவில், நுழைவுவாயிலில் 33 அடி உயர தூண்களுடனும், மூன்று அடுக்கு மாடிகளுடனும் அமையப்பெற்ற மிகப்பெரிய பிரம்மாண்டமான கட்டிடமாகத் திகழ்ந்துள்ளது.

20 அடுக்கு கட்டிடங்கள்

இந்த அரண்மனையின் சுவர்கள் மற்றும் கதவு அமைப்புகளின் தரவுகளைச் சேகரித்த ஆய்வுக் குழுவினர், அதை 3D மாதிரி கணக்கீட்டில் உள்ளீடு செய்து, அக்கால கட்டிடங்களின் தாங்கும் திறனைப் பரிசோதித்தனர்.

இதன் மூலம், அப்போதைய தொழில்நுட்பத்தில் சுமார் 19 அடுக்குகள் வரை உயரமாக நிற்கும் வானளாவிய கட்டிடங்களை எழுப்ப முடிந்தது என்பது கணினி மாதிரிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கால நூல்களும் கற்பாறை ஓவியங்களும் அப்பகுதியில் 20 அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள் இருந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.

இன்று மீண்டும்...
கம்பிகளால் பலப்படுத்தப்பட்ட கான்கிரீட்டோ அல்லது எஃகு கம்பிகளோ இல்லாத அந்த காலகட்டத்தில், கற்களையும் மரக்கட்டைகளையும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் பிணைத்து கட்டிடத்தை உறுதிப்படுத்தும் டிம்பர்-லேஸ்டு மேசன்ரி என்ற சிறப்பு நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த பழங்கால பிணைப்பு தொழில்நுட்பமே கட்டிடங்களுக்கு அதிக வலிமையை வழங்கியுள்ளது.

ஆச்சரியப்படும் விதமாக, இத்தகைய பண்டைய கலப்பின தொழில்நுட்பம் இன்று மீண்டும் நவீன கட்டிடக் கலையில் உயரமான கட்டிடங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்கால மனிதர்கள் தங்களின் கூர்மையான தொழில்நுட்ப அறிவால் அக்காலத்திலேயே வானளாவிய கட்டிடங்களை உருவாக்கியுள்ளது, வரலாற்று வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Link
பிரான்ஸில் வெடித்த மாணவர் புரட்சி

பிரான்ஸில் வெடித்த மாணவர் புரட்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved