news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

குலசை சூரசம்ஹாரம் கோலாகலம், அரக்கனை வதம் செய்த அம்மன்

விண்ணை பிளந்த பக்தர்கள் முழக்கம்

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், கனமழைக்கு மத்தியிலும் கோலாகலமாக நடைபெற்றது. தன் முகம், யானை, எருது, சேவல் என 4 ரூபங்களில் போரிட்ட அரக்கனை, முத்தாரம்மன் வதம் செய்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு மனமுருகி வழிபட்டனர்.

சிகர நிகழ்ச்சியான...
மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளோடு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.

வரங்கள் பல பெற்று ஆணவத்துடன் வாழ்ந்து வந்த மகிஷாசூரன் என்ற எருமை முகம் கொண்ட அரக்கன், தேவர்களையும் முனிவர்களையும் சித்திரவதை செய்து வந்ததால், அவனது அக்கிரமங்களை அடக்க நினைத்த முத்தாரம்மன், கோபத்தின் உச்சமாய் மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து மகிஷாசூரனை விஜயதசமி அன்று வதம் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அசுர வதம்
இந்நிலையில், குலசேகரப்பட்டினம் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளிய நிலையில், முதலில் அசுரன் தனது சுயரூபமான அசுர வடிவில் வந்தபோது சூலாயுதம் கொண்டு தலையை கொய்து முத்தாரம்மன் வதம் செய்தார்.

அசுரன் அடுத்ததாக உக்கிரமான சிங்கத்தின் முகத்தோடு தோன்றிய போது, சிங்க முகத் தலையையும் அம்மன் வதம் செய்தார்.

சிங்க முகம் வீழ்ந்ததும், எருது தலையுடன் ஆக்ரோஷமாக வந்த போது அதனையும் அம்மன் வதம் செய்தார்.

ஓம் காளி ஜெய் காளி
இறுதியாக அனைத்து வடிவங்களும் அழிய, அம்மனுக்கு அஞ்சி தப்பிப்பதற்காக ஒரு சிறிய சேவல் உருவமெடுத்து மாயமாகத் தோன்றினான். ஆனால், சேவல் உருவத்தையும் வதம் செய்து, அவனது உடலைத் தன் காலடியில் போட்டு ஆட்கொண்ட முத்தாரம்மன்னின் காட்சி தத்ரூபமாக அரங்கேறிய நிலையில், அதனை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

தசார திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முன்னதாக கோவிலில் இருந்து புறப்பட்ட முத்தாரம்மனை பார்த்ததும், ’ஓம் காளி ஜெய் காளி,’ என பக்தர்கள் முழக்கங்களை எழுப்பி மனமுருகி வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved