Also Watch
Read this
By: Web Team

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்கும் இந்த படத்தில், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இத்திரைப்படம் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர், இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved