நடிகர் சூரி தனக்கு நல்ல நண்பர் எனவும், நல்ல மனதுக்காரர் எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பேசிய அவர், நடிகர் சூரி தொடர் வெற்றி படங்களுக்கு பொருத்தமானவர்தான் என்றார்.
மேலும், படங்களில் தனது சக நடிகர்களின் நடிப்பு தன்னை விட மிஞ்சியிருந்தால் மிகவும் சந்தோஷம் கொள்வதாக கூறினார். தனக்கு 'டப்' கொடுத்து நடிக்கும்போது ரசிப்பதாகவும், நிவின் பாலி அந்த மாதிரி நபர்தான் எனவும், தனக்கு 'டப்' கொடுத்து நடித்து அசத்தியதாகவும் கூறினார்.
மதுரைக்கு வந்த தனுஷ்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தேசிய விருது பெற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்தடைந்த தனுசுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆளுயர மாலையணிவித்தும் வெற்றிவேல் பரிசாக அளித்தும் ஆரவாரம் செய்தனர்.
தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள மாரநாடு கருப்பசாமி கோவிலில் நடைபெற உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து தனுஷ், எஸ்ஜே சூர்யா, நடிகை ப்ரீத்தி மோகன் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் விமானம் மூலம் மதுரைக்கு சென்றனர்.