news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரூ. 100 கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்
tv

Also Watch

ரூ. 100 கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்

ஐஸ்வர்யா லட்சுமி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐஸ்வர்யா லட்சுமி

"ரூ. 100 கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்"

சமீபத்துல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள்ல இருந்து விலகுறதா அறிவிச்சிருந்தாங்க. அதற்கான காரணம் என்னங்கறத பத்தி இப்போ மனம் திறந்து பேசிருக்காங்க. அதில், "சோஷியல் மீடியாவுல இருந்து விலகுனது தனக்கு மிகுந்த மன அமைதியை அளிச்சிருக்கு.

முன்பு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தப்போ சிலர் தனது புகைப்படங்களை மார்பிங் செஞ்சு ஆபாசமான, மோசமான கருத்துகளைப் பதிவிட்டது தன்னை மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கிருந்துச்சு.

அந்த காலகட்டத்துல இந்த உலகமே எனக்கு எதிராக இருப்பது போலவும், அனைவரும் என்னை வெறுப்பது போலவும் உணர்ந்தேன். அதனால் இனி யாராவது எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், சோஷியல் மீடியா பக்கம் நான் திரும்ப மாட்டேன்.." ன்னு பேசிருக்காங்க. மேலும், ஆன்லைனில் பழகுவதை விட மக்களை நேரில் சந்தித்து பழகுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்"ன்னும் மனம் திறந்திருக்காரு.

H. வினோத்துக்கு ஆறுதல் கூறிய CM விஜய்


சமீபத்த்துல ஜனநாயகன் படத்தோட டைரக்டர் ஹெச். வினோத், தமிழக முதலமைச்சரும் தமிழ்ல உச்ச நடிகருமான விஜய் பத்தி மனம் திறந்து பேசிருக்கிறாரு. அதுல, "எங்க படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் கிடைக்காதததால திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியலை.

அதோடு, படம் இணையத்துல கசிந்த சம்பவமும் எங்களை ரொம்பவே பாதிச்சது. அந்தச் சூழ்நிலையில் விஜய் சார் மிகவும் வருத்தமடைஞ்சாரு. ஆனா அதைப் பற்றி கவலைப்படாம உடனே என்னை அழைச்சு, 'கவலைப்படாதீங்க... எல்லாம் சரியாகிடும். இது போல நடக்கத்தான் செய்யும். இதையும் நாம் சேர்ந்து கடந்து போவோம்" என்று தனக்கு தைரியம் சொன்னதா H. வினோத் தெரிவிச்சிருக்காரு.

காலமானார் பிரபல நடிகரின் தந்தை


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஹீரோவாக மாறிய நடிகர் சதீஷின் தந்தை காலமாகிருக்கிறாரு. அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்துல இருக்கற வீட்டுல அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்திட்டு வராங்க. தற்போது இந்த செய்தி திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்திட்டு வருது.

Related Link
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved