Also Watch
Read this
By: Web Team

திரையுலகில் பொன்விழா ஆண்டு காணும் நடிகர் ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் கலைப் பயணத்தை தொடர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனை எனவும், எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச் சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved