Also Watch
Read this
By: Web Team

வரும் சட்டமன்ற தேர்தலில், நடிகர் சூர்யா போட்டியிடப் போவதில்லை என்று, அவரது நற்பணி இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவரது நற்பணி இயக்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கடந்த சில நாட்களாக, நடிகர் சூர்யா பற்றி பொய்யான தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து பரப்பப்பட்டு வருகிறது.
இது, உண்மைக்கு மாறான தகவல். இதுமட்டுமின்றி சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணம், அகரம் ஆகிய இரண்டும் அவரது வாழ்விற்கு போதுமான நிறைவை தந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு கூட சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்பட்டது. அதற்கு காரணமானவர்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
நடிகர் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்த்துக்களுடன் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவார்.
எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடிகர் சூர்யா பற்றி வெளியான தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved