Also Watch
Read this
By: Manigandan Raja

கஞ்சா பறிமுதல் :
ஓசூர் அருகே சுமார் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரைக் கண்டு தப்பியோடிய அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருமாவட்ட செய்திகள்கே மத்திகிரி காவல் நிலைய காவலர் சக்திவேல் கொத்த ஜீகூர் பிரிவு ரோடு அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மதியம் சுமார் 1:00 மணி அளவில், கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியிலிருந்து பதிவு எண் இல்லாத 'ஹீரோ டெஸ்டினி' (Hero Destini) ஸ்கூட்டரில் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்துள்ளனர். அவர்களை மறித்து காவலர் சக்திவேல் சோதனை நடத்த முயன்றார்.
போலீசாரின் சோதனையைக் கண்டவுடன், இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் தப்பியோடிவிட்டனர். எனினும், சமயோசிதமாக செயல்பட்ட காவலர், வாகனத்தை ஓட்டி வந்த முதன்மை நபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திகிரி காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், அவர் தேன்கனிக்கோட்டை வைரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசா (24), தனியார் டிவிஎஸ் (TVS) நிறுவன தொழிலாளி என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்த 12 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத ஹீரோ டெஸ்டினி இருசக்கர வாகனம் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது கைதான சீனிவாசா மீது மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? எங்கிருந்து கஞ்சா எங்கு கடத்தப்பட இருந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மற்ற இரு நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved