news-tamil-logo

3/19/2026, 1:21:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேகர்பாபுவை நெருக்கும் 2 பேர்
tv

Also Watch

tv

Read this

சேகர்பாபுவை நெருக்கும் 2 பேர்

வாக்காளப் பெருமக்களே...

Posted on: Feb 10, 2026 06:18 AM

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், தொழிற்சாலைகள் நிறைந்த அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற திமுகவில் மும்முனை போட்டியில் நிர்வாகிகள் மல்லுக்கட்டும் நிலையில், அதிமுக, த.வெ.க.விலும் யார் யார் வேட்பாளராக நிற்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது. அம்பத்தூர் தொகுதி யாருக்கு என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

அதிரி புதிரி ஆட்டங்கள்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ. சீட்டுக்காக தற்போதே அதிரி புதிரி ஆட்டங்கள் நடக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், சென்னையில் முக்கிய தொகுதியான அம்பத்தூர் தொகுதியில் யார் சீட்டுக்கு மல்லுக் கட்டுவது என்ற தகவல் தான் வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு மறு சீரமைப்பின் கீழ், அம்பத்தூர், சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுகவின் வேதாச்சலம் என்பவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர் என்பவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2021 தேர்தலில் அதிமுகவின் அலெக்சாண்டரை தோற்கடித்து திமுகவை சேர்ந்த ஜோசப் சாமுவேல் என்பவர் வெற்றி பெற்றார்.

மீண்டும் ஜோசப் சாமுவேல்
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜோசப் சாமுவேல், எம்.பி., டி.ஆர். பாலு மூலம் காய் நகர்த்தி வருகிறாராம். அம்பத்தூர் தொகுதியில் பெரும்பாலும், வன்னியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தினர் அதிகளவில் வசித்து வரும் நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஜோசப் சாமுவேலும், சமூக வாக்குகள் பலமாக இருக்கும் என நினைத்து 2ஆவது முறையாக போட்டி போட துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஜோசப் சாமுவேல் VS பி.கே.மூர்த்தி vs MTR நாகராஜ்
ஆனால், இந்த முறை அவ்வளவு ஈஸியாக சாமுவேலுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள். ஏனென்றால், திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தியும் எம்.எல்.ஏ. சீட்டுக்காக கோதாவில் குதித்து இருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமான பி.கே.மூர்த்தி கடந்த முறையே சீட்டு கேட்டு தலைமையை அணுகிய நிலையில், இந்த முறை வாய்ப்பை தவற விடக் கூடாது என உறுதியோடு இருப்பதாக சொல்கிறார்கள். அதேமாதிரி, சேகர்பாபுவுக்கு நெருக்கமான அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் MTR நாகராஜ் என்பவரும் அம்பத்தூர் தொகுதிக்கு ஆசைப்படுவதால் திமுகவில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுகவில் யாருக்கு?
அதிமுகவில் கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற அலெக்சாண்டருக்கு தான் இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படும் என சொல்கிறார்கள். ஒரு வேளை அதிமுக கூட்டணியில் அம்பத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பாஸ்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் வேதாச்சலமும் நிற்கக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

முதன்முறையாக தவெக
முதன்முறையாக களத்தில் நிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திலும் பாலமுருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போதைக்கு அம்பத்தூர் தொகுதியில் தெரிந்த முகமாக பாலமுருகன் மட்டுமே இருக்கும் நிலையில், குறிப்பிடத்தக்க இளைஞர்களை கை வசம் வைத்திருக்கிறாராம். என்ன தான் இளைஞர்கள் பலமாக இருந்தாலும், இன்னும் பாலமுருகனின் செயல்பாடுகள் அரசியல் சார்ந்து இல்லாமல் ரசிகர் மன்றம் போலவே இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 10022026

இன்றைய ராசி பலன்கள் 10022026

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 33 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved