news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்கூட்டியில் சென்ற 2 பெண்கள் கீழே விழுந்து படுகாயம்
tv

Also Watch

tv

Read this

ஸ்கூட்டியில் சென்ற 2 பெண்கள் கீழே விழுந்து படுகாயம்

கல்லுப்பட்டி, திருச்சி

142

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

பெண்கள் கீழே விழுந்து படுகாயம் :

திருச்சி மாவட்டம் சேத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி அஞ்சம்மாள் 48. அதே பகுதியில் சேர்ந்த சின்னசாமி மனைவி முத்துக்கண்ணு 38 இருவரும் இன்று காலை துவரங்குறிச்சியில் இருந்து சேத்துப்பட்டிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை அஞ்சம்மாள் ஓட்டிச் சென்ற நிலையில் அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் முத்துக்கண்ணு.

இருசக்கர வாகனம் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அஞ்சம்மாள் அணிந்திருந்த தலைக்கவசம் காற்றின் வேகத்தில் நகரவே
இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதியதில் அஞ்சம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னால் அமர்ந்து வந்த முத்துக்கண்ணுவிற்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையிலேயே கவிழ்ந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை
தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
காயமடைந்த ஒருவருக்கு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 36 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved