Also Watch
Read this
By: Manigandan Raja

பிரகார வலம் வந்து கொடிமரத்திற்கு பூ வைத்து வழிபாடு :
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதம் 1ஆம் தேதிகளில் வரும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால்திருமண தடை நீங்கி,குழந்தை பாக்கியம், வியாபாரம்,
உடல்நலம் போன்ற சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பொள்ளாச்சியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி 1 ஆம் தேதியான் இன்று ஸ்ரீ விஷ்ணுபதி காலம் சிறப்பாக நடைபெற்றது
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பெருமாளுக்கு சிறப்பு யாகம் பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது
அனைத் தொடர்ந்துநடைபெற்ற கொடிமர நமஸ்காரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூக்களை கையில் வைத்துக் கொண்டு 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன்பு வைத்து வழிபட்டனர் மேலும்குடும்ப சகிதமாக சங்கல்பம் செய்து கொண்டனர்பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ விஷ்ணுபதி என்றால் பெருமாளின் தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவி பொருமாளும் ஒன்றாக இருக்கும் போது தாயார் பெருமாளிடம் என்ன வரம் கேட்டாலும் தர வேண்டும் என்று
கேட்டபோது சிரித்துக் கொண்டுவரம் தருகிறார்.
ஆண்டு தோறும் ஆவணி, வைகாசி,கார்த்திகை, மாசி மாதங்களில் முதல் தேதியன்று ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய கால தினத்தன்றுசூரிய பகவான் நேரடியாக வருவதாகவும்.
பெருமாளும் தாயாரும் ஒன்றாக இருந்து வேண்டிய வரங்களை தருவதாகவும்திருமணம் ஆகாதவர்கள்யாகத்தில் கலந்து கொண்டு 27 முறை கொடிமரத்தை சுற்றி வந்து தீபம் ஏற்றி வழிபட்டால்
பொதுமக்கள் கோரிக்கைகளை பெருமாள் நிறைவேற்றுவார்என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved