Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 02:58 PM
By: Srini Vasan

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஈச்சர் லாரி மூலமாக திராட்சை பழப்பெட்டியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒருகோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், மகாராஷ்ட்ராவை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனகாபுத்தூர் அருகே போலீஸார் வாகன சோதனைக்கு நிற்காமல் இந்த ஈச்சர் லாரி தப்பி சென்றது.
இதனையடுத்து, போலீசார் லாரியை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, லாரியில் ஏற்றி வரப்பட்ட திராட்சை பெட்டிக்குள் மறைத்து 300 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved