திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மூலச்சத்திரம் பகுதியில் உள்ள கார் குடோனில் சட்டவிரோதமாக வைத்திருந்த வெடி பொருட்கள் தீப்பிடித்து வெடித்ததில், ரியாஸ் என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் குடோனில் இருந்த மூன்று கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், ஒருவர் சிகிச்சையில் இருப்பதாகவும், 2 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.