கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் உளுந்து, மணிலா, எள் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்து வரும் நிலையில், குமராட்சி, அழிஞ்சி மங்கலம், தொண்டமாநத்தம், எடையூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை என கூறப்படுகிறது.