Also Watch
Read this
By: Web Team

79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இன்று காலை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.
முன்னதாக, முப்படை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், கல்பனா சாவ்லா விருது, வீரதீர செயல்களுக்கான விருது உள்ளிட்ட விருதுகளையும், பதக்கங்களையும் வழங்குகிறார்.
தொடர்ந்து, கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி, விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved