news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 38 அடி கொடிமரத்தை 32 வகை மூலிகை எண்ணெயில் ஊற வைத்தனர்
tv

Also Watch

38 அடி கொடிமரத்தை 32 வகை மூலிகை எண்ணெயில் ஊற வைத்தனர்

மீனச்சல், கன்னியாகுமரி

63

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Kodimaram

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள் கடந்த இரண்டு
ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆலயத்தில் நிரந்தர கொடிமரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளா மாநிலம் கோன்னி பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்க மரம்
பணிகள் முடிவடைந்து.


*கொடிமர தைலாதி வாசம்* அதாவது 32 வகையான மூலிகை பொருட்களால் தயாரித்த எண்ணையில் தனியாக தயாரித்த எண்ணெய் தொட்டியில் 38 அடி உயரம் கொண்ட கொடிமரத்தை
ஊறலிடும் புண்ணிய நிகழ்வு ஆகும்.

ஓராண்டுக்கும் மேல் இந்த கொடி மரத்தை எண்ணெய் தொட்டியில் இந்த மூலிகை எண்ணெயில் ஊறவைத்த பின்பு கொடிமரத்தைப் பாதுகாக்க அதன் மீது அலங்கரிக்கப்பட்ட செம்புத் தகடு பொருத்தப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

அதன் முன்னோடியாக கொடிமர தைலாதி வாசம் என்ற சடங்கு இன்று காலை 9.45 மணிக்கும் 10.15 மணிக்கும் இடையேயான சுப முகூர்த்தத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய தந்திரி பிரம்மஶ்ரீ கிழக்கே செறுமுக்குமனை திருச்சூர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் கொடிமர சிற்பி ( சபரிமலை கொடிமர சிற்பி )பத்தியூர் வினோத் பாபு மேற்பார்வையில் நடைபெற்றது.

பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினர் S. ராஜசேகரன் நாயர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு மூலிகை எண்ணெயை கொடிமர எண்ணெய் தொட்டியில் ஊற்றி புண்ணிய நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திரளான பக்தர்கள் குடும்பதோடு சடங்கில் கலந்து கொண்டு மூலிகை எண்ணெயை கொடிமர எண்ணெய் தொட்டியில் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

Related Link
தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் முற்றிலும் சேதம்

தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் முற்றிலும் சேதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved